செய்திகள்

பிக் பாஷ் டி20 லீக்: இங்கிலாந்து வீரர் பட்லர் சிட்னி தண்டர் அணியுடன் ஒப்பந்தம்

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன பட்லர், பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

மாலை மலர்

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான பட்லர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடக்கூடியவர். தற்போது பட்லரை சிட்னி தண்டர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. சிட்னி தண்டர் அணிக்காக முதல் 6 போட்டிகளில் பட்லர் பங்கேற்கிறார்.

இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இதனால் பட்லர் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.