செய்திகள்

ராஜபாளையத்தில் தூக்குபோட்டு வியாபாரி தற்கொலை

ராஜபாளையத்தில் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன் (வயது27). இவரது மனைவி சேர்மக்கனி.

விவசாயிகளிடம் நெல் மூடைகளை வாங்கி அதனை வியாபாரிகளுக்கு கமி‌ஷன் அடிப்படையில் சுரேஷ்கண்ணன் விற்று வந்தார். கடந்த சில மாதங்களாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுரேஷ் கண்ணன் கடன் தொல்லையால் அவதிப்பட்டார். நேற்று ராஜபாளையம் அருகே மீனாட்சியாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த அவர் இரவில் அங்கு தங்கினார்.

காலையில் உறவினர்கள் சுரேஷ்கண்ணன் தங்கிய அறைக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது மனைவி சேர்மக்கனி கொடுத்த புகாரின்பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews