செய்திகள்

பெரியகுளம் அருகே தொழில் நஷ்டத்தால் தரகர் தற்கொலை

பெரியகுளம் அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த தரகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் ராஜா(வயது41). தரகரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிராவல்ஸ் நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டது. அன்றுமுதல் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே ராஜா வடுகபட்டியில் இருந்து காமாட்சிபுரம் செல்லும் சாலையில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமான உயிரிழந்தார்.

இது குறித்து தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT