வணிகம்

GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் ஷாக் கொடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை.

தங்கம் விலை கடந்த மாதம் குறைந்து கொண்டே வந்து நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. மேலும் விலை குறைந்து சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் செல்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த 2-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை கிராமுக்கு ரூ.655-ம், சவரனுக்கு ரூ.5,240-ம் உயர்ந்து இருந்தது.

தொடர்ந்து விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட சூழலில், 6-ந்தேதி திடீரென்று விலை சரிந்தது. அதன்படி, 5-ந்தேதி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 385-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 80-க்கும் விற்பனையானது. 6-ந்தேதி கிராமுக்கு ரூ.245-ம் சவரனுக்கு ரூ.1,960-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 140-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

7-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,160-க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது. நேற்று ஒரு கிராம் ரூ.13,160-க்கும், சவரன் ரூ.1,05,280-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை உயர்வு

இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.760 ரூபாய் உயர்ந்து ரூ.1,06,040-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.205-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

8-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,280

7-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,280

6-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,120

5-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,080

4-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

8-11-2026- ஒரு கிராம் ரூ.205

7-11-2026- ஒரு கிராம் ரூ.205

6-11-2026- ஒரு கிராம் ரூ.205

5-11-2026- ஒரு கிராம் ரூ.210

4-11-2026- ஒரு கிராம் ரூ.210

SCROLL FOR NEXT