வணிகம்

GOLD PRICE TODAY: கிடுகிடுவென உயரும் தங்கம் விலை: கலக்கத்தில் நடுத்தர மக்கள்!

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்தது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,05,760-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கும் விற்பனையானது. 2-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கும் விற்பனையானது. 3-ந்தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது. 4-ந்தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையானது.

நேற்று காலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும், கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கும் விற்பனையான நிலையில் மீண்டும் மாலையில் விலை அதிகரித்தது. தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,07,840-க்கும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.13,480 விற்பனையானது.

தங்கம் விலை உயர்வு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.4,400 அதிகரித்து உள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக பெரிய அளவில் உயராமல் இருந்து வந்த நிலையில் நேற்றும், இன்றும் அதிகமாக விலை உயர்ந்து இருப்பது ஏழை-நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.

தங்கம் விலை திடீரென்று உயர்ந்து மீண்டும் உச்சத்தை நோக்கி செல்வதால் நகை பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

05-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,840

04-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600

03-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000

02-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760

01-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

05-08-2026- ஒரு கிராம் ரூ.240

04-08-2026- ஒரு கிராம் ரூ.235

03-08-2026- ஒரு கிராம் ரூ.235

02-08-2026- ஒரு கிராம் ரூ.235

01-08-2026- ஒரு கிராம் ரூ.235