வணிகம்

GOLD PRICE TODAY: தீபாவளி பரிசாக ஏற்றம் இல்லாமல் தொடரும் தங்கம் விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

தங்கம் விலை ஏற்ற-இறக்கத்துடன் நீடித்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டுமா? என பலரும் பிரமிப்பாக கேட்டு வந்த சூழலில், கடந்த ஆண்டு (2025) டிசம்பர் மாதம் 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சம் என்ற உச்சத்தை கடந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

அதன் பின்னரும் விலை குறையுமா? என எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விலை 'கிடுகிடு'வென உயர்ந்து கொண்டே வந்தது. அதன்படி, நடப்பாண்டில் ஜனவரி மாதம் தாறுமாறாக எகிறியதை பார்க்க முடிந்தது.

அந்த மாதத்தில் ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் என வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

இடைத்தேர்தல்

அதனைத்தொடர்ந்து தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டாலும், ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தில் இருந்து குறையவில்லை. ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை யிலான அளவிலேயே விற்கப்பட்டது.

இப்படியாக பயணித்த தங்கம் விலை இனி குறைய வாய்ப்பே இல்லை, அதிகரிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் இருந்து தங்கம் விலை அதிரடியாக குறையத் தொடங்கியது. இதற்கு பல காரணங்கள் பல்வேறு தரப்பில் சொல்லப்பட்டு வந்தாலும், அமெரிக்காவின் இடைக்காலத்தேர்தல் பெரும் முக்கிய காரணமாக கூறப்பட்டது.

அதே காரணத்தையே தங்க நகை வியாபாரிகளும் தெரிவித்தனர். அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் முடிந்த பிறகு, இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறும் என்றும் திட்டவட்டமாக கூறினார்கள்.

மீண்டும் ஏறுமுகம்

அந்த கணிப்பின்படியே, அமெரிக்காவின் இடைக்கால தேர்தலுக்கு முந்தைய நாளில் இருந்தே விலை ஏறத்தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தேர்தல் முடிந்து முடிவு வெளியானதும், விலை 'டாப் கியரில்' மீண்டும் ஏறுமுகத்தில் செல்லத் தொடங்கியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் அதிகரித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலையில் அதிரடி உயர்வு இருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.285-ம், சவரனுக்கு ரூ.2,280-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 385-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 80-க்கும் விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.655-ம், சவரனுக்கு ரூ.5,240-ம் உயர்ந்திருக்கிறது.

தங்கம் விலை நிலவரம்

இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் விலை சவரன் ரூ.1,07,080-க்கும், ஒரு கிராம் ரூ.13,385-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.210-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

5-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,080

4-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

3-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

2-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,200

1-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,01,840

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

5-11-2026- ஒரு கிராம் ரூ.210

4-11-2026- ஒரு கிராம் ரூ.210

3-11-2026- ஒரு கிராம் ரூ.200

2-11-2026- ஒரு கிராம் ரூ.200

1-11-2026- ஒரு கிராம் ரூ.200

SCROLL FOR NEXT