வணிகம்

GOLD PRICE TODAY: ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை

வெள்ளி விலை தற்போது உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,100-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த நிலையில், கடந்த 26, 27 மற்றும் 28-ந்தேதிகளில் சற்று உயர்ந்திருந்தது. 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.13,195-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 30-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,040-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,320-க்கும் விற்பனையானது. 31-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.310 குறைந்து ரூ.12,730-க்கும் விற்பனையானது.

நவம்பர் 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனையானது. 2-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கும் விற்பனையானது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,600-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,825-க்கும் விற்பனையான நிலையில் தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை அதிரடி உயர்வு

இந்த நிலையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.1,04,800-க்கும், கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை உயர்வு

வெள்ளி விலையில் இன்று காலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கு விற்பனையான நிலையில் தற்போது வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.210-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

3-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

2-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,200

1-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,01,840

31-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,01,840

30-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,320

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

3-11-2026- ஒரு கிராம் ரூ.200

2-11-2026- ஒரு கிராம் ரூ.200

1-11-2026- ஒரு கிராம் ரூ.200

31-10-2026- ஒரு கிராம் ரூ.200

30-10-2026- ஒரு கிராம் ரூ.210

SCROLL FOR NEXT