கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது.
தங்கம் விலை கடந்த 27-ந்தேதி முதல் தொடர்ச்சியாக விலை குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 155-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 240-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,230-க்கும், சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
30-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840
29-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,240
28-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,720
27-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960
26-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400
30-07-2026- ஒரு கிராம் ரூ.235
29-07-2026- ஒரு கிராம் ரூ.235
28-07-2026- ஒரு கிராம் ரூ.235
27-07-2026- ஒரு கிராம் ரூ.240
26-07-2026- ஒரு கிராம் ரூ.240