வணிகம்

GOLD PRICE TODAY : தங்கம் விலை... இன்றைய நிலவரம்

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மாலை மலர்

தங்கம் விலை ஏற்றம் கண்டு, கடந்த 18-ந்தேதியில் இருந்து விலை குறையத் தொடங்கியது. கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வரை சென்றது. தொடர்ந்து விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து மிரட்டியது.

தங்கம் விலை நேற்று குறைந்தது. காலை விலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் குறைந்த நிலையில், பின்னர் பிற்பகல் விலையில் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து காணப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையிலும் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

30-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400

29-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,600

28-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,600

27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600

26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

30-10-2025- ஒரு கிராம் ரூ.165

29-10-2025- ஒரு கிராம் ரூ.166

28-10-2025- ஒரு கிராம் ரூ.165

27-10-2025- ஒரு கிராம் ரூ.170

26-10-2025- ஒரு கிராம் ரூ.170