கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 31-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கு விற்பனையானது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,05,760-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கும் விற்பனையானது. நேற்று ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கடந்த 28-ந்தேதி முதல் 7 நாட்களாக மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
02-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760
01-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760
31-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,040
30-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840
29-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,240
02-08-2026- ஒரு கிராம் ரூ.235
01-08-2026- ஒரு கிராம் ரூ.235
31-07-2026- ஒரு கிராம் ரூ.235
30-07-2026- ஒரு கிராம் ரூ.235
29-07-2026- ஒரு கிராம் ரூ.235