சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.1,09,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. அந்த வகையில் கடந்த 19-ந்தேதி வரை விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த 21-ந்தேதியில் இருந்து விலை குறைந்து வருவதை பார்க்க முடிகிறது.
அந்த வரிசையில் தங்கம் விலை நேற்றும் அதிரடியாக சரிவை சந்தித்தது. காலையில் கிராமுக்கு ரூ.235-ம், சவரனுக்கு ரூ.1,880-ம் குறைந்தது. அதனை தொடர்ந்து மாலையில் மேலும் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் சரிந்தது. ஆக மொத்தம் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.335-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 680-ம் சரிந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்துக்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை, நேற்றைய விலை குறைவால், ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 665-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.1,09,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.13,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து தங்கம் வாங்கும் செலவு அதிகரிப்பதால் சர்வதேச அளவில் தங்கத்திற்கான தேவை குறைந்து விலை சரிவடைகிறது. மேலும், அமெரிக்க அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் அதிகரித்ததால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்திலிருந்து பத்திரங்களை நோக்கி திரும்பியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் தங்கம் விலை சரிவை சந்திப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
28-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.109,320
27-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,000
26-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,000
25-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,080
24-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,000
28-09-2026- ஒரு கிராம் ரூ.245
27-09-2026- ஒரு கிராம் ரூ.250
26-09-2026- ஒரு கிராம் ரூ.250
25-09-2026- ஒரு கிராம் ரூ.250
24-09-2026- ஒரு கிராம் ரூ.250