வணிகம்

GOLD PRICE TODAY: நகை பிரியர்களுக்கு ஷாக்... மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! - இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் 4-வது நாளாக மாற்றம் இல்லை.

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை, அதன்பிறகு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. குறிப்பாக, கடந்த 10-ந்தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்திலேயே இருந்து வந்தது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 465-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர் விலை சரிவால் நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 'தங்கம் வாங்க இதுவே சரியான நேரம், எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து நகைகளை வாங்கி விடலாம்' என்று அவர்கள் ஆவலுடன் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

இந்தநிலையில், அவர்களின் எதிர்பார்ப்பிற்கு அதிர்ச்சி கொடுப்பது போல் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை உயர்வு

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 உயர்ந்து ரூ.93,720-க்கும், கிராமுக்கு ரூ.115 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,715-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2000 வரை உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் 4-வது நாளாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

23-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800

22-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,720

21-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,720

20-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,080

19-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.95,840

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

23-11-2026- ஒரு கிராம் ரூ.175

22-11-2026- ஒரு கிராம் ரூ.175

21-11-2026- ஒரு கிராம் ரூ.175

20-11-2026- ஒரு கிராம் ரூ.175

19-11-2026- ஒரு கிராம் ரூ.180

SCROLL FOR NEXT