வணிகம்

GOLD PRICE TODAY: தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

கடந்த 18-ந் தேதியில் இருந்து விலை உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்திருந்தது. அந்த வரிசையில் நேற்றும் விலை அதிகரித்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 430-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

தங்கம் விலை சரிவு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

23-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,000

22-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,440

21-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760

20-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200

19-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

23-07-2026- ஒரு கிராம் ரூ.245

22-07-2026- ஒரு கிராம் ரூ.245

21-07-2026- ஒரு கிராம் ரூ.240

20-07-2026- ஒரு கிராம் ரூ.235

19-07-2026- ஒரு கிராம் ரூ.235