சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ரூ.92,800-க்கு விற்பனையாகிறது.
உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த மாதத்தில் கடந்த 2 வாரங்களாக தங்கத்தின் விலை சரசரவென சரிந்தது. ஒரு சவரனின் விலை ரூ.1 லட்சத்தை தாண்டி இருந்த நிலையில், ஏறிய வேகத்தில் இறங்கியும் வருகிறது.
சென்னையில் கடந்த 20-ந்தேதி ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 510 ஆகவும், சவரன் ரூ. ஆயிரத்து 80 ஆகவும் இருந்தது. 21-ந்தேதி தங்கம் விலை மேலும் சரிந்தது. கிராமுக்கு ரூ.45-ம், சவரனுக்கு ரூ.360-ம் குறைந்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 465-க்கும். சவரன் ரூ.91 ஆயிரத்து 720-க்கும் விற்பனையானது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,465-க்கும், ஒரு சவரன் ரூ.91,720-க்கும் விற்பனையானது. தங்கத்தின் விலை இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ரூ.92,800-க்கும், கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
22-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,720
21-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,720
20-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,080
19-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.95,840
18-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.97,720
22-11-2026- ஒரு கிராம் ரூ.175
21-11-2026- ஒரு கிராம் ரூ.175
20-11-2026- ஒரு கிராம் ரூ.175
19-11-2026- ஒரு கிராம் ரூ.180
18-11-2026- ஒரு கிராம் ரூ.185