வணிகம்

GOLD PRICE TODAY: நகை பிரியர்களுக்கு ஷாக்... ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகம் கண்டு வருகிறது. கடந்த 14-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது. இது படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 600-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-க்கும் விற்கப்பட்டது. இது நேற்று ரூ.250 அதிகரித்து கிராம் ரூ.14 ஆயிரத்து 850-க்கும், ரூ.2 ஆயிரம் அதிகரித்து சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை உயர்வு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

21-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,800

20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800

19-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200

18-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,320

17-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

21-08-2026- ஒரு கிராம் ரூ.270

20-08-2026- ஒரு கிராம் ரூ.260

19-08-2026- ஒரு கிராம் ரூ.250

18-08-2026- ஒரு கிராம் ரூ.255

17-08-2026- ஒரு கிராம் ரூ.255