சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.255 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,215-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த 2 ஆண்டுகளாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த ஆண்டில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.45 ஆயிரம் வரை உயர்ந்தது. அதிகபட்சமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி சவரன் ரூ.1,00,120-க்கு விற்றது. அதன்பின் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 1-ந்தேதி கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், சவரன் ரூ.99 ஆயிரத்து 520-ம் ஆக இருந்தது. அதன்பின் அதே மாதத்தில் 29-ந்தேதி தங்கம் கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதுதான் இந்த ஆண்டின் அதிகபட்ச விலையாகும். இதில் இருந்து தங்கத்தின் விலை இறக்கமும், ஏற்றமுமாக இருந்து வந்தது.
தங்கத்தின் விலை குறையுமா? என மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவு ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக அமைந்த பின் தங்கத்தின் விலை சற்று குறைந்தது. சென்னையில் கடந்த 9-ந் தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 255-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 40-க்கும் விற்றது.
அதன்பிறகு கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 540-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 320-க்கும் விற்பனையானது. தங்கத்தின் விலை நேற்று மேலும் குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் குறைந்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 470-க்கும், சவரன் ரூ.99 ஆயிரத்து 760-க்கும் விற்றது.
இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,040 குறைந்து ரூ.97,720-க்கும், கிராமுக்கு ரூ.255 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,215-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.185-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
17-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,760
16-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,320
15-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,920
14-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,920
13-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,01,560
17-11-2026- ஒரு கிராம் ரூ.190
16-11-2026- ஒரு கிராம் ரூ.190
15-11-2026- ஒரு கிராம் ரூ.195
14-11-2026- ஒரு கிராம் ரூ.195
13-11-2026- ஒரு கிராம் ரூ.195