வணிகம்

GOLD PRICE TODAY: தங்கம் விலை சரிவு - இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

தங்கம் விலையானது நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,200-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை குறைந்தது

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

15-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,440

14-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200

13-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600

12-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

11-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

15-07-2026- ஒரு கிராம் ரூ.240

14-07-2026- ஒரு கிராம் ரூ.235

13-07-2026- ஒரு கிராம் ரூ.240

12-07-2026- ஒரு கிராம் ரூ.240

11-07-2026- ஒரு கிராம் ரூ.240