வணிகம்

GOLD PRICE TODAY: தங்கம் விலை அதிரடி குறைவு - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம்-இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந்தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 500 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 11-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 150-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.

12-ந்தேதி ரூ.50 அதிகரித்து கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ரூ.400 அதிகரித்து சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை குறைவு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

13-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760

12-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

11-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200

10-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

09-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

13-08-2026- ஒரு கிராம் ரூ.260

12-08-2026- ஒரு கிராம் ரூ.260

11-08-2026- ஒரு கிராம் ரூ.260

10-08-2026- ஒரு கிராம் ரூ.250

09-08-2026- ஒரு கிராம் ரூ.250