தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து 1,10,720-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,840-க்கும் விற்பனையானது. மாலையில் மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,760க்கும், கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.13,720க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,09,480-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,685-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து ரூ.1,08,720-க்கும், கிராமுக்கு ரூ.95 குறைந்து ஒரு கிராம் ரூ.13,590-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் 11-வது நாளாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
13-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,480
12-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,760
11-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,040
10-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,040
09-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,520
13-10-2026- ஒரு கிராம் ரூ.245
12-10-2026- ஒரு கிராம் ரூ.245
11-10-2026- ஒரு கிராம் ரூ.245
10-10-2026- ஒரு கிராம் ரூ.245
09-10-2026- ஒரு கிராம் ரூ.245