தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம்-இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந்தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 500 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 150-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ரூ.50 அதிகரித்து கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ரூ.400 அதிகரித்து சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600 உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
12-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600
11-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200
10-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
09-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720
08-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720
12-08-2026- ஒரு கிராம் ரூ.260
11-08-2026- ஒரு கிராம் ரூ.260
10-08-2026- ஒரு கிராம் ரூ.250
09-08-2026- ஒரு கிராம் ரூ.250
08-08-2026- ஒரு கிராம் ரூ.250