வணிகம்

GOLD PRICE TODAY: சற்றே சரிந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த 5-ந்தேதி வரை அதிகரித்து வந்த நிலையில், 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை விலை குறைந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் முதல் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை உயர்ந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 560-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 350-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை சரிவு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,06,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

10-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,800

09-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,560

08-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,600

07-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,200

06-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,480

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

10-07-2026- ஒரு கிராம் ரூ.245

09-07-2026- ஒரு கிராம் ரூ.245

08-07-2026- ஒரு கிராம் ரூ.245

07-07-2026- ஒரு கிராம் ரூ.250

06-07-2026- ஒரு கிராம் ரூ.250