வணிகம்

GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக குறைந்த தங்கம் விலை

வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த மாதம் குறைந்து கொண்டே வந்து நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. மேலும் விலை குறைந்து சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் செல்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த 2-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை கிராமுக்கு ரூ.655-ம், சவரனுக்கு ரூ.5,240-ம் உயர்ந்தது.

தொடர்ந்து விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட சூழலில், தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.760 ரூபாய் உயர்ந்து ரூ.1,06,040-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,210-க்கும், சவரனுக்கு ரூ.360 ரூபாய் குறைந்து ரூ.1,05,680-க்கு விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம்

இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,015-க்கும், சவரனுக்கு ரூ.1,560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,120-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

10-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,680

9-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,040

8-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,280

7-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,280

6-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,120

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

10-11-2026- ஒரு கிராம் ரூ.205

9-11-2026- ஒரு கிராம் ரூ.205

8-11-2026- ஒரு கிராம் ரூ.205

7-11-2026- ஒரு கிராம் ரூ.205

6-11-2026- ஒரு கிராம் ரூ.205

SCROLL FOR NEXT