மும்பை பங்குச்சந்தை நேற்றைய விடுமுறைக்குப்பின் இன்று 1000 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. நேற்றுமுன்தினம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 81,106.65 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 1142 புள்ளிகள் உயர்ந்து 82,248.68 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
அதேபோல் இந்திய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி நேற்று முன்தினம் 25,044.65 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 292 புள்ளிகள் உயர்வுடன் 25,337.80 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் ஏற்றம் காணப்பட்டது. அமெரிக்க பங்குச்சந்தையில் முந்தைய அமர்வில் ஏற்பட்ட வலுவான முன்னேற்றம் ஆசியச் சந்தைகளுக்கு ஆதரவாக அமைந்தது.
* சர்வதேசச் சந்தைகளில் பங்குகள் உயர்வு.
* கச்சா எண்ணெய் விலை குறைந்தது.
* வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் மீண்டும் முதலீடு செய்வது.
* அமெரிக்கா- ஈரான் இடையிலான பதற்றம் தணியக்கூடும் என்ற நம்பிக்கை.
* நிறுவனங்களின் காலாண்டு வருவாய் குறித்த சாதகமான எதிர்பார்ப்புகள்.
* கச்சா எண்ணெய் விலை குறைவது இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு சாதகமாகக் கருதப்படுகிறது.