ரிசர்வ் வங்கி 
வணிகம்

சாதனை அளவு.. நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி அரசு பத்திரங்களை விற்ற ரிசர்வ் வங்கி

2018ம் நிதியாண்டில் ரூ.90 ஆயிரம் கோடி மதிப்பிலான அரசு பத்திரங்களை ரிசர்வ் வங்கி நிகரமாக விற்பனை செய்திருந்தது.

பணப்புழக்கத்தை குறைக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான அரசு பத்திரங்களை விற்றுள்ளது.

வங்கிகளிடம் அதிக அளவில் பணம் புழக்கத்தில் இருந்ததால், ஒருநாள் கடனுக்கான வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியின் கொள்கை வட்டி விகிதத்தைவிட குறைந்தது.

எனவே வங்கிகளில் உள்ள அதிகப்படியான பணப்புழக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் வெளிச்சந்தையில் அரசு பத்திரங்களை அதிக அளவில் விற்பனை செய்யும் வகையில் 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் அரசு பத்திரங்களின் விற்பனை அளவை மத்திய அரசு குறைத்தது.

விற்பனை

இதன்மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான அரசு பத்திரங்களை ரிசர்வ் வங்கி நிகரமாக விற்றுள்ளது.

இதற்கு முன்பு பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க அதிகபட்சமாக 2018ம் நிதியாண்டில் ரூ.90 ஆயிரம் கோடி மதிப்பிலான அரசு பத்திரங்களை ரிசர்வ் வங்கி நிகரமாக விற்பனை செய்திருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ரிசர்வ் வங்கி மேலும் ரூ.1 லட்சம் கோடி முதல் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான அரசு பத்திரங்களை விற்பனை செய்யக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக ஆனந்த் ரதி குளோபல் பைனான்ஸ் நிறுவனத்தின் கருவூலப் பிரிவு தலைவர் ஹர்சிம்ரன் சஹ்னி தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதம்

ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை தொடர்ந்து குறைத்தால், வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடுத்த வாரம் நடைபெறும் ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT