வணிகம்

பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் விற்பனை: இந்திய ரிசர்வ் வங்கி

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரூ.1 லட்சம் கோடி அரசு பத்திரங்களை விற்பனை செய்வதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி தனது அரசு பத்திரங்களை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்திய பத்திரங்களின் விலை சரிந்து காணப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும் வங்கிகள் அரசு பத்திரங்களை (soverign notes) பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்கின்றன.

நாட்டில் தற்போது பணப்புழக்கம் அதிகரித்து (inflation) காணப்படுகிறது; மேலும் எண்ணெய் இறக்குமதி விலைகளும் அதிகரித்து, அடுத்த மாதம் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 2 முதல் 6 சதவீதம் வரை அதிகரித்து காணப்பட்டது.

உலகளாவிய விற்பனை சரிவில் உள்நாட்டு பத்திரங்களும் இணைந்ததால், 2036-ஆம் ஆண்டில் முதிர்வடையும் 6.94 சதவீதப் பத்திரத்தின் மீதான வருவாய் 7 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்து 7.09 சதவீதமாக காணப்பட்டது.

மேலும் 2031-ஆம் ஆண்டில் முதிர்வடையும் 6.36 சதவீதப் பத்திரத்தின் மீதான வருவாய் 16 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்து 6.78 சதவீதமாக உள்ளது.

தேசிய அளவில் அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் வாங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

1 லட்சம் கோடி கடன் பத்திரங்கள்

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, பணவீக்க அபாயங்களை ஏற்படுத்தும், வங்கிகளில் காணப்படும் உபரி பணத்தை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து அரசு பத்திரங்களை விற்பனை செய்து, அதன்மூலம் வங்கிகளிடம் இருந்து ரூ.1 லட்சம் கோடி பணத்தை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

கரூர் வைஸ்யா வங்கி கருவூல தலைவர்

இந்திர ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு குறித்து கரூர் வைஸ்யா வங்கி கருவூல தலைவர் வி.ஆர்.சி. ரெட்டி கூறுகையில், “இந்த முடிவு, இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளிலேயே மிகவும் கடுமையானதாகும்.

இதனால், அதிக மதிப்புடையதாக இருந்த ஐந்தாண்டு பத்திரப் பிரிவுதான் தர்க்கரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலப் பத்திரங்களின் வருவாய் அதிகரிக்கும்போது, வருவாய் வளைவு மேலும் அதிகரிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

ஐந்தாண்டு மற்றும் பத்து ஆண்டுப் பத்திரங்களின் வருவாய்க்கு இடையிலான இடைவெளி சுமார் 20-30 அடிப்படைப் புள்ளிகள் அளவில் நிலைபெறக்கூடும்” என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT