வணிகம்

டாடா ஸ்டீல் - ஏபிஎஸ் அப்போலோ இடையே மெகா ஒப்பந்தம் - பங்குச்சந்தையில் பலத்த அடி

ஏபிஎல் அப்போலோ நிறுவனத்திற்கு ரூ.28,000 கோடிக்கு விற்கவுள்ளது.

ஏபிஎல் அப்பல்லோ டியூப்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனம் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தம் இன்று பங்குச்சந்தையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஏபிஎல் அப்பல்லோ டியூப்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனம் இடையே மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது.

ஒப்பந்தம்

இதன்படி டாடா ஸ்டீல், ஏபிஎல் அப்போலோ நிறுவனத்தின் விளம்பரதாரர் (புரமோட்டர்ஸ்) பங்குகளை ஒரு பங்குக்கு ரூ.2,100 என்ற விலையில் மொத்தம் 26.38% பங்குகளை ரூ.15,510 கோடிக்கு வாங்க உள்ளது.

மேலும் பொதுப் பங்குதாரர்களிடமிருந்து கூடுதலாக 26% பங்குகளை வாங்குவதற்கு ஒரு பங்குக்கு ரூ.2,301 என்ற விலையில் மொத்தம் ரூ.16,756 கோடிக்கு ஓபன் சலுகையை அறிவித்துள்ளது.

இதன் மூலம் டாடா ஸ்டீலின் மொத்த பங்கு 52% ஆக உயரும்.

அதேநேரம் இந்த ஒப்பந்தத்தின்படி, டாடா ஸ்டீல் நிறுவனம் தனது எஃகு குழாய் வணிகத்தையும், டாடா ஸ்டீல் கலர்ஸ் நிறுவனத்தையும் ஏபிஎல் அப்போலோ நிறுவனத்திற்கு ரூ.28,000 கோடிக்கு விற்கவுள்ளது.

பங்குச்சந்தையில் தாக்கம்

இந்த ஒப்பந்தம் ஏற்படுத்திய நிச்சயத்தன்மையால் பங்குச்சந்தையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்பட்டுள்ளது.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் இன்று கடுமையாக சரிந்தன.

காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்கு 8% சரிந்து, 52 வாரங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவை எட்டியது.

ஏபிஎல் அப்பல்லோ டியூப்ஸ் நிறுவனத்தின் பங்குகளும் கிட்டத்தட்ட 18% சரிந்தன.

SCROLL FOR NEXT