அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து தடைகளை விதித்துள்ளதால் மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய், எரிவாயு வரத்து குறைந்துள்ளது.
இதனால் பல்வேறு நாடுகள் நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில் இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் வீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
அந்த வகையில் மாத தொடக்கமான இன்று (ஜூன் 1, திங்கள்கிழமை) தமிழ்நாட்டில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்து, ரூ.3,283-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக சிலிண்டரின் தொடர் விலை உயர்வால் ஹோட்டல்கள் மற்றும் அதுசார்ந்த பிற தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த ஏற்றமுமின்றி தொடர்வது பொதுமக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.