மொபைல் எண்ணை மாற்றாமல் வேறு சிம் வாங்குவது போல இனி வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறும் வசதியை அறிமுகம் செய்ய ரிசர்வ் வாங்கி பரிசீலித்து வருகிறது.
ரிசர்வ் வங்கியால் சமீபத்தில் வெளியிடப்பட்ட 'பேமெண்ட்ஸ் விஷன் 2028' ஆவணத்தில் இந்த திட்டத்தின் முன்மொழிவு சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கையை செயல்படுத்த, ரிசர்வ் வங்கி 'பேமெண்ட்ஸ் ஸ்விட்சிங் சர்வீஸ்' (PaSS) எனப்படும் ஒரு மையப்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் தளத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இதன் மூலம், வாடிக்கையாளர் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறும்போது, அவர்களின் அனைத்து EMI-கள், SIP-கள், கடன்கள் உள்ளிடவையும் தானாகவே புதிய வங்கிக்கு மாற்றப்படும்.
பலர் சம்பளக் கணக்குகள், முதலீடுகள் மற்றும் அரசுத் திட்டங்களுடன் பிணைக்கப்பட்டிருப்பதால், விருப்பமில்லாதபோதும் தங்கள் பழைய வங்கியிலேயே தொடர்ந்து கணக்கு வைத்துள்ளனர்.
புதிய நடைமுறையால் பயனர்கள் எல்லா இடங்களிலும் தங்கள் கணக்கு விவரங்களை நேரடியாக மாற்ற வேண்டிய தேவை இருக்காது.
அதேநேரம் இந்த செயல்முறையில் கணக்கு எண் மாறாவிட்டாலும், புதிய வங்கியின் IFSC குறியீடு மாறும்.