வணிகம்

இந்தியாவில் அதிரடியாக சரிந்த தங்கத்தின் தேவை - காரணம் இதுதான்

தங்கத்தின் மதிப்பு 22 சதவீதம் அதிகரித்து 188 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

உலக அளவிலான எதிரொலியைத் தொடர்ந்து உள்நாட்டில் தங்கத்தின் தேவை 29 சதவீதம் அதிரடியாகச் சரிந்தது.

தங்கம் தேவை

இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் குறிப்பாக நடுத்தரக் குடும்பங்களுக்கு, தங்கம் என்பது வெறும் ஆடம்பர ஆபரணம் மட்டுமல்ல; அது ஒரு மிகச் சிறந்த முதலீடு மற்றும் நிதிப்பாதுகாப்பு அரண் ஆகும். பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் எப்போதும் உயர்ந்து வந்த தங்கத்தின் தேவை, தற்போது உலகளாவிய விலையேற்றத்தின் எதிரொலியாக உள்நாட்டிலும் அதிரடியாகச் சரிந்துள்ளது.

நடப்பு ஆண்டின் 3-வது காலாண்டில் (ஜூலை-செப்) உலக அளவில் தங்கத்தின் தேவை 1 சதவீதம் குறைந்து 1,369 டன்னாக உள்ளது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெரும் சரிவு

இதன் காரணமாக தங்கத்தின் மதிப்பு 22 சதவீதம் அதிகரித்து 188 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதிக விலை காரணமாக நகைக்கான தேவை 17 சதவீதம் சரிந்து 315 டன்னாகக் குறைந்துள்ளது. இது 2020-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டை விடக்குறைவான அளவாகும். இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்தின் தேவை முறையே 29 சதவீதம் மற்றும் 22 சதவீதம் சரிந்துள்ளது.

குறிப்பாக உள்நாட்டில் கடந்த ஆண்டின் 228.2 டன்களில் இருந்து தங்கத்தின் தேவை 162.5 டன்களாகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து உலக தங்க கவுன்சிலின் இந்திய பிராந்திய தலைமை நிர்வாக அதிகாரி சச்சின் ஜெயின் கூறுகையில், சீனா மற்றும் இந்தியாவில் பருவகால மாற்றங்களால் தேவை சற்று மீண்டுள்ளது. இருப்பினும், சில்லறை முதலீட்டாளர்கள் விலை குறித்த தெளிவின்மையால் தயக்கம் காட்டி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

தங்கக்கட்டி-நாணயம்

உலக அளவிலான மத்திய வங்கிகள் 321 டன் தங்கத்தை கையிருப்பில் சேர்த்துள்ளன. இது கடந்த ஆண்டை விட 42 சதவீதம் அதிகமாகும். தங்கத்தில் முதலீடு செய்யும் இடிஎப் நிதியங்கள் 211 டன் தங்கத்தை ஈர்த்துள்ளன. தங்கக்கட்டி மற்றும் தங்க நாணய தேவை 19 சதவீதம் சரிந்து 268 டன்னாக உள்ளது.

தொழில்நுட்பத் துறையில் தங்கத்தின் தேவை 3 சதவீதம் அதிகரித்து 35 டன்னாக உயர்ந்துள்ளது. மொத்த தங்க வினியோகம் சதவீதம் குறைந்து 1.369 டன்னாக உள்ளது. சுரங்க உற்பத்தி 3 சதவீதம் அதிகரிந்து 1.071 டன்னாக உயர்ந்துள்ளது. விலை குறித்த நிச்சயமற்ற தன்மையே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT