வணிகம்

1 டாலருக்கு ரூ.97-ஐ நெருங்கும் ரூபாய் மதிப்பு.. நிலைமையை சரிசெய்ய ரிசர்வ் வங்கி முன்னாள் இருக்கும் வாய்ப்புகள் என்ன?

2013இல் இதேபோன்ற சூழலில் ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது.

மத்திய கிழக்கு பாத்திரங்களுக்கு மத்தியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இன்று சந்தை முடிவில், ஒரு அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ரூ.96.36 ஆக உள்ளது. விரைவில் ரூபாய் மதிப்பு 1 டாலருக்கு ரூ.97 ஆக உயரக்கூடும்.

ரூபாயின் தொடர் வீழ்ச்சியை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

சந்தையில் இருந்து அதிகளவில் வெளியேறிவரும் வெளிநாட்டு முதலீட்டாரகளை மீண்டும் ஈர்ப்பதே இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று கூறப்படுகிறது.

எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க, வட்டி விகிதத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வட்டி விகிதத்தை அதிகரித்தால் இந்தியா-அமெரிக்கா பாண்ட் ஈவுத்தொகை இடைவெளி அதிகரிக்கும். இது வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியாவில் முதலீடு செய்ய தூண்டும்.

மேலும் சிறப்பு அரசு பத்திரங்களை வெளியிட்டு அதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி கடந்த 2013இல் இதேபோன்ற சூழலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் இருக்கும் டாலர்களை ஈர்க்க வங்கிகள் மூலம் சிறப்பு வைப்புத்தொகைத் திட்டம் தொடங்கப்ட்டது. அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும் ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.