வணிகம்

GOLD PRICE TODAY : அதிரடியாக குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்

வெள்ளி விலை நேற்று சற்று குறைந்த நிலையில், இன்று எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 505-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14 ஆயிரத்து 370-க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 960-க்கும் விற்றது.

நேற்று உயர்வு

தொடர்ந்து, மாத தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதன்படி கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 385 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்த நிலையில், ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்த நிலையில் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நேற்று சற்று குறைந்த நிலையில், இன்று எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னையில் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

01-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,80

31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960

30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040

29-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040

28-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

01-09-2026- ஒரு கிராம் ரூ.255

31-08-2026- ஒரு கிராம் ரூ.260

30-08-2026- ஒரு கிராம் ரூ.260

29-08-2026- ஒரு கிராம் ரூ.260

28-08-2026- ஒரு கிராம் ரூ.265