வணிகம்

GOLD PRICE TODAY: காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை- தற்போதைய நிலவரம்!

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது.

சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது.

அதனை தொடர்ந்து 3-ந்தேதி தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது.

அதனை தொடர்ந்து 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை அடுத்து 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.14,190-க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.

7-ந்தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 130-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 8-ந்தேதி கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது. 9-ந்தேதி சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும் விற்பனையானது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,040-க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கும் விற்பனையானது.

காலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாலை நிலவரம்

சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்த நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை தங்கம் கிராமுக்கு ரூ.240 குறைந்திருந்த நிலையில் தற்போது ரூ.140 உயர்ந்து ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனையானது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

11-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,120

10-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,040

09-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,160

08-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,160

07-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,040

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

11-09-2026- ஒரு கிராம் ரூ.245

10-09-2026- ஒரு கிராம் ரூ.255

09-09-2026- ஒரு கிராம் ரூ.255

08-09-2026- ஒரு கிராம் ரூ.255

07-09-2026- ஒரு கிராம் ரூ.255

SCROLL FOR NEXT