வணிகம்

GOLD PRICE TODAY: வார தொடக்க நாளில் உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்

சென்னையில் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ரூ.255-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்திலேயே பயணித்து வந்தது. அதன்படி, கடந்த 5-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரை மட்டும் கிராமுக்கு ரூ.840-ம், சவரனுக்கு ரூ.6 ஆயிரத்து 720-ம் உயர்ந்திருந்தது.

கடந்த 9 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை நேற்று குறைந்து காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 220-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி காலையில், கிராமுக்கு ரூ.180-ம், சவரனுக்கு ரூ.1,440-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 40-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனையடுத்து மாலையில், ஏற்றம் கண்டது. கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,240-ம் அதிகரித்தது. ஆக நேற்று முன்தினத்தைவிட கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் மட்டுமே குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.

தொடர்ந்து தங்கம் விலை, கடந்த 15ம் தேதி அன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்த நிலையில், ரூ.1,14,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்த நிலையில் ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.55 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

15-8-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760

14-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

13-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760

12-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

11-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

15-08-2026- ஒரு கிராம் ரூ.255

14-08-2026- ஒரு கிராம் ரூ.255

13-08-2026- ஒரு கிராம் ரூ.260

12-08-2026- ஒரு கிராம் ரூ.260

11-08-2026- ஒரு கிராம் ரூ.260