வணிகம்

GOLD PRICE TODAY : குறைந்த வேகத்தில் கூடிய தங்கம் விலை - மாலை நிலவரம்

வெள்ளி விலையும் மாலையில் ஒரு கிராம் 5 ரூபாய் அதிகரித்து ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.5000 உயர்ந்து ரூ.2,60,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கம் காணப்பட்ட நிலையில் வார இறுதி நாளில் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையானது.

அதனை தொடர்ந்து இன்றும் தங்கம் உயரும் என்று எதிர்க்கப்பட்ட நிலையில், காலையில் அதிரடியாக குறைந்தது. இன்று காலையில், கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,810-க்கும் சவரனுக்கு 1120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையானது.

அதேபோல வெள்ளி விலை இன்று காலை வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. மாலை நிலவரப்படி கிராம் தங்கம் ரூ.180 அதிகரித்து 13,990 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கம் ரூ.1,440 உயர்ந்து ரூ. 1,11, 920 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் மாலையில் ஒரு கிராம் 5 ரூபாய் அதிகரித்து ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.5000 உயர்ந்து ரூ.2,60,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

05-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

04-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

03-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,800

02-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,000

01-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

05-04-2026- ஒரு கிராம் ரூ.255

04-04-2026- ஒரு கிராம் ரூ.255

03-04-2026- ஒரு கிராம் ரூ.255

02-04-2026- ஒரு கிராம் ரூ.255

01-04-2026- ஒரு கிராம் ரூ.265