கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,05,760-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கும் விற்பனையானது.
2-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கும் விற்பனையானது. 3-ந்தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையானது.
தொடர்ந்து, சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று மாலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1.07.840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360க்கு விற்கப்பட்ட நிலையில் மாலையில் ரூ.120 உயர்ந்து ரூ.13,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
05-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,880
04-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600
03-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000
02-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760
01-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760
31-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,040
05-08-2026- ஒரு கிராம் ரூ.240
04-08-2026- ஒரு கிராம் ரூ.235
03-08-2026- ஒரு கிராம் ரூ.235
02-08-2026- ஒரு கிராம் ரூ.235
01-08-2026- ஒரு கிராம் ரூ.235
31-07-2026- ஒரு கிராம் ரூ.235