தங்கம் 
வணிகம்

GOLD PRICE TODAY : தங்கப்பிரியர்களுக்கு இனிப்பான செய்தி! இறங்குமுகத்தில் தங்கம் விலை

நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.295-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 360-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 505-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை

தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இப்படியாக நீடித்த விலை மாற்றம், கடந்த 6-ந்தேதியில் இருந்து டாப் கியரில் எகிறத் தொடங்கியது.

கடந்த 1-ந்தேதி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 220-க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 760-க்கு விற்பனை ஆனது. 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 750-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து விலை அதிகரித்து, கடந்த 24-ந்தேதி ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 240 என்றும் உயர்ந்தது.

இப்படியாக விலை உயர்ந்து வந்த சூழலில், அதன் பின்னர் சற்று குறையத் தொடங்கியது. கடந்த 27-ந்தேதி கிராமுக்கு ரூ.285-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 280-ம் குறைந்து இருந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் விலை குறைந்தது. அதன்படி, நேற்றுமுன்தினம் முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.295-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 360-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 505-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதிரடி குறைவு

இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 370 ரூபாய்க்கும் சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 22-ந்தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,910 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040

29-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040

28-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,400

27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800

26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

30-08-2026- ஒரு கிராம் ரூ.260

29-08-2026- ஒரு கிராம் ரூ.260

28-08-2026- ஒரு கிராம் ரூ.265

27-08-2026- ஒரு கிராம் ரூ.265

26-08-2026- ஒரு கிராம் ரூ.265