தங்கம் விலை இன்று மாற்றமின்றி சவரனுக்கு ரூ.1,05,560-க்கும், கிராமுக்கு ரூ.13,195-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நான்கு நாட்களுக்குப் பிறகு குறைந்து, கிராமுக்கு ரூ.215-க்கும், கிலோக்கு ரூ.2.15 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 19-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.13,570-க்கும் விற்பனையானது. 20-ந்தேதி சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,07,920-க்கும், ஒரு கிராம் ரூ.80 குறைந்து ரூ.13,490-க்கும் விற்பனையானது. 21-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,07,120-க்கும், ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கும் விற்பனையானது.
22-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,880-க்கும், ஒரு கிராம் ரூ.155 குறைந்து ரூ.13,235-க்கும் விற்பனையானது. 23-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,400 குறைந்து ரூ.1,04,480-க்கும், ஒரு கிராம் ரூ.175 குறைந்து ரூ.13,060-க்கும் விற்பனையானது. 24-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.13,070-க்கும் விற்பனையானது.
25-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,04,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,070-க்கும் விற்பனையானது. 26-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,085-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,135-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.13,195-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்ப்பட்ட நிலையில், விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. கிராம் ரூ.13,195-க்கும் சவரன் ரூ.1,05,560-க்கும் விற்பனையாகிறது.
நான்கு நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.215-க்கும், ஒரு கிலோ ரூ.2.15 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
28-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,560
27-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080
26-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,680
25-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,560
24-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,560
28-10-2026- ஒரு கிராம் ரூ.220
27-10-2026- ஒரு கிராம் ரூ.220
26-10-2026- ஒரு கிராம் ரூ.220
25-10-2026- ஒரு கிராம் ரூ.220
24-10-2026- ஒரு கிராம் ரூ.220