வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாள்தோறும் தங்கத்தின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 10-ந்தேதி கிராம் ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர், தங்கம் விலை ஏற்றத்துடனே பதிவாகி வந்தது.
இதற்கிடையே, கடந்த 18-ந்தேதி கிராம் ரூ.14 ஆயிரத்து 290-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செயப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14 ஆயிரத்து 205 எனவும், சவரனுக்கு ரூ.680 சரிந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது. காலையில் குறைந்த தங்கம் விலை மாலை திடீரென உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 400-க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,710-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 680-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800
19-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200
18-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,320
17-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160
16-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760
20-08-2026- ஒரு கிராம் ரூ.260
19-08-2026- ஒரு கிராம் ரூ.250
18-08-2026- ஒரு கிராம் ரூ.255
17-08-2026- ஒரு கிராம் ரூ.255
16-08-2026- ஒரு கிராம் ரூ.255