செய்திகள்

முழு அடைப்பால் நிறுத்தப்பட்ட தமிழகம் - கர்நாடகா இடையேயான பேருந்துகள் இயங்கின

காவிரி பிரச்சனையில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடந்ததால் நிறுத்தப்பட்ட கர்நாடக பேருந்துகள் மாலை முதல் வழக்கம் போல இயங்கத்தொடங்கின. #TNBandh

ஒசூர்:

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலதாமதம் இன்றி அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டம், ரெயில் மற்றும் சாலை மறியலில் சுமார் 10 லட்சம் பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

முழு அடைப்பு காரணமாக கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் மற்றும் இங்கிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் எல்லைகளில் நிறுத்தப்பட்டிருந்தன. மாலை முழு அடைப்பு நிறைவு பெற்றதும் ஒசூர் எல்லையில் மீண்டும் பேருந்துகள் வழக்கம் போல இயங்கத்தொடங்கின.

போலீஸ் பாதுகாப்புடன் கர்நாடக பேருந்துகள் தமிழக எல்லைக்குள் நுழைந்தன. #TNBandh #TamilNews

SCROLL FOR NEXT