செய்திகள்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து பாரிமுனையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து பாரிமுனையில் சட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

ராயபுரம்:

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையில் இன்று சட்ட கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். பாரிமுனையில் உள்ள பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியேறும் வாயில் முன்பு சட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். மாணவர்கள் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து எஸ்பிளனேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களிடம் சமாதானப்பேச்சு நடத்தினர். இதையடுத்து மாணவ- மாணவிகள் கலைந்து சென்றனர்