செய்திகள்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து லாலாப்பேட்டையில் தி.மு.க.வினர் சாலைமறியல்

தமிழக அரசு பஸ் கட்டண உயர்த்தியதை கண்டித்து லாலாப்பேட்டையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

லாலாபேட்டை:

லாலாபேட்டை தி.மு.க கூட்டணி சார்பில் பஸ் கட்டணம் உயர்வை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். தி.மு.க ஒன்றிய அவை தலைவர் அரவாண்டி தலைமையில் கட்சி தொண்டர்கள் கோஷமிட்டு மறியலில் ஈடுபட்டனர். 

இதில் ஊராட்சி செயலர் ரங்கரத்தினம் மற்றும் பிள்ளாபாளையம் ஊராட்சி செயலர் மற்றும் மறியலில் ஈடுபட்ட தி.மு.கவினரை லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் கைது செய்து ஓரு தனியார் மண்டபத்தில் வைத்தனர்.  

இதேபோல் பஞ்சப்பட்டியில் கரிகாலன் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் 47 பேர் கைது செய்யப்பட்டனர். #tamilnews

SCROLL FOR NEXT