சாலை விபத்து 
செய்திகள்

ரஷியாவில் சோகம் - ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலி

ரஷியாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 15 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

மாஸ்கோ:

ரஷியாவின் சபாகல்ஸ்கி மாகாணத்தின் கிழக்கு பகுதியில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

மகோய்டூய்- ஸ்ரெடென்சிக்- ஒலோச்சி நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் பஸ் வந்தபோது, பஸ் சின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.

இதனால் நிலைகுலைந்த பஸ் பாலத்தில் இருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் பஸ் கவிழ்ந்து 15 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.