தேனி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி தோப்புகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது39). இவர் போடி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. மேலும் அவரது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இதுபோல் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜாராமின் மனைவி கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இது ராஜாராவிற்கு மனவேதனையை ஏற்படுத்தியது. வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக தூக்கு மாத்திரையை தின்று விட்டு படுத்துக்கொண்டார்.
வெகுநேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அங்கு மயங்கி கிடந்த ராஜாராமை மீட்டு சிகிச்சைக்காக க.விலக்கு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.