விபத்து 
செய்திகள்

தஞ்சையில் பஸ் மோதி வாலிபர் பலி

தஞ்சையில் பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த காசவளநாடுபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 24). இவர் தஞ்சைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் காசவளநாடுபுதூரில் இருந்து புறப்பட்டார்.

தஞ்சை-பட்டுக்கோட்டை ரோடு மடிகை பகுதியில் வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சசிக்குமார் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சசிக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.