பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேலகபிஸ்தலம் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் கிருஷ்ண மூர்த்தி (வயது80). வளையல் வியாபாரி. இவர் ராஜகிரி பகுதியில் தள்ளுவண்டியில் வளையல் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று ராஜகிரி மெயின்ரோட்டில் கிருஷ்ணமூர்த்தி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பஸ் கிருஷ்ணமூர்த்தி மீது மோதியது.
இதில் தலையில் பலத்த அடிபட்ட கிருஷ்ணமூர்த்தியை சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிக்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் உத்தாண்டம் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா, ஏட்டு மதியழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக பஸ் டிரைவர் சக்கரவர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.