விபத்து 
செய்திகள்

அய்யம்பேட்டையில் பஸ் மோதி கார் டிரைவர் பலி

அய்யம்பேட்டையில் பஸ் மோதி கார் டிரைவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி பெரிய தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது24). கார் டிரைவர். இவர் இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்காக சூலமங்கலம் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் அய்யம்பேட்டை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே தஞ்சையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் சாகுல் ஹமீது மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) துர்க்கா, சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.