திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்நெடுஞ்சாலையில் டைல்ஸ் கற்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி விரைந்து சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் எதிரே வந்த பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது, கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதில் மூன்று பெண்கள் அடங்குவர்.
மேலும் டைல்ஸ் கற்கள் ஏற்றிக் கொண்டு வந்த கண்டெய்னர் லாரி பேருந்து மீது மோதியதால் பயணிகளை மீட்கும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.