தாராபுரம்:
தாராபுரம் மங்களாம் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கவின் பிரசாத் (16). இவரது நண்பர்கள்தாராபுரம் தேவேந்திர குல தெருவை சேர்ந்த கண்ணன் (16), நல்லம்மை நகரை சேர்ந்த பிரனேஷ் (16). இவர்கள் அனைவரும் பிளஸ்-1 மாணவர்கள். இவர்களில் பிரனேஷ் அரசு பள்ளியிலும், கண்ணன், கவின் பிரசாத் ஆகியோர் தனியார் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.இன்று காலை 8.30 மணிக்கு 3 பேரும் பிளஸ்-1 பொது தேர்வு எழுதுவதற்காக ஒரே மொபட்டில் சென்றனர். தாராபுரம் ஐந்து முக்கு ரவுண்டானாவில் வந்த போது தாராபுரத்தில் இருந்து கரூருக்கு அரசு பஸ் சென்றது.
அந்த பஸ்சின் முன் சக்கரத்தில் மொபட் மோதியது. இதில் 3 மாணவர்களும் காயம் அடைந்தனர்.இதில் பிரனேஷ் கால் முறிந்தது. அவர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மற்ற 2 மாணவர்களும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews