செய்திகள்

ஒத்தக்கடை அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பரிதாப பலி: ஒருவர் படுகாயம்

ஒத்தக்கடை அருகே அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப இறந்தனர்.

மாலை மலர்

மேலூர்:

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே உள்ள ஆண்டார் கொட்டாரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40). இவரும், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் நாட்டரசன்கோட்டையை அடுத்துள்ள சாத்தணியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (20), பாண்டி (30) ஆகிய 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று மேலூருக்கு புறப் பட்டனர்.

ஒத்தக்கடை அருகே உள்ள மேலூர்-திருமோகூர் சந்திப்பு ரோட்டில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ரஞ்சித்குமார், வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பாண்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பழனி யப்பன், தனிப்பிரிவு ஏட்டு மணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.