திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுதிப் பந்தோபாத்யாய் 
செய்திகள்

புல்லட் ரெயில் திட்டம் இந்தியாவில் சாத்தியம் இல்லை- பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கருத்து

புல்லட் ரெயில் திட்டம் இந்தியாவில் சாத்தியம் இல்லை என பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.

மாலை மலர்

மக்களவையில் இன்று ரெயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுதிப் பந்தோபாத்யாய் பேசியதாவது:-

புல்லட் ரெயில் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்துவது சாத்தியம் இல்லை. அப்படியே செயல்படுத்தினாலும் அந்த ரெயில்களை அதிவேக ரெயில்கள் என்று அழைக்கலாமே தவிர, புல்லட் ரெயில்கள் என அழைக்க முடியாது. இந்த புல்லட் ரெயில் திட்டம் என்பது புரளியான மற்றும் தவறான வாக்குறுதி. புல்லட் ரெயில்கள் ஒரு தனி அமைப்பைக் கொண்டுள்ளன.

ரெயில்வேயில் உணவுக்கூடம், தூய்மை, உணவு பாதுகாப்பு மற்றும் தரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பணி வழங்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரெயில் பயணம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், பயத்துடன் இருக்கக் கூடாது. ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் ஒருங்கிணைத்திருப்பது, ரெயில்வே துறைக்கு உதவவில்லை.